அதுக்கு அம்மா சொன்னாங்க பறவை இன்னும் சாகலடா அது உயிர் வாழ முயற்சி எடுத்துகிட்டு தான் இருக்கு, சில நாளில திடமா பறக்கும். அம்மா சொன்னத யோசிச்சிகிட்டே தூங்கிட்டான். அடுத்த நாள் பறவை கண் விழித்ததை கண்டு வியந்தான். அதே ஆனந்தத்தில் அம்மாவிடமும் ஓடிப்போய் சொல்லி மகிழ்ந்தான். இரண்டு மூன்று நாட்கள் செல்ல பறவையின் உடலில் பல முன்னேற்றங்கள் கண்டான். ஆறு நாளில் பறவை பறக்கவும் தயாராகியது. இதை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த பையன் அவன் அம்மாவிடம் போய் கேட்கிறான் அன்றைக்கே பறவைக்கு ஒன்னும் ஆகாதுன்னு எப்படி சொன்னீர்கள் என்று, அதுக்கு அம்மா சொன்னாங்க அந்த பறவை அடிபட்டு வலியில சோர்ந்து போய் படுக்கல ஒவ்வொரு நாளும் உயிர் வாழ முயற்சி செய்திட்டே இருந்தது. பின் பையன் அம்மாவுடன் சேர்ந்து பறவையை வானத்தை நோக்கி சுதந்திரமாக பறக்க விட்டான். நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் வீணாகுவதில்லை. வெற்றி ஆனந்தத்தை தரும், தோல்வி நல்ல பாடத்தை கற்றுக்கொடுக்கும்.

"முயற்சி திருவினையாக்கும் முயன்றால் சாதிக்க முடியும்.”

K.SURUTHI

1st Year / IT- DEPARTMENT

19